பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழா கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிந்தைய நிகழ்வுகள் இன்றும், நாளையும் நடைபெறவுள்ளன.
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், மற்றொரு தொழில் அதிபரான வீரேன் மகள் ராதிகா மெர்ச்சண்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. 3 நாட்கள் நடைபெறவுள்ள இவர்களது திருமண விழா நேற்று தொடங்கியது.
இந்த மூன்று நாள் திருமண விழாவையொட்டி, மும்பை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. திருமண விழாவில், பிரபல அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் திரைப்பட நட்சத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பங்கேற்றுள்ளனர்.
விழாவில், தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி, மகள், மருமகன், பேரன் என குடும்பத்துடன் கலந்து கொண்டார். இதேபோல, இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானும் திருமண விழாவில் பங்கேற்றார்.
இதேபோல் நடிகர் சூர்யா தமது மனைவி ஜோதிகாவுடன் ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்வில் பங்கேற்றார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் ராம்சரண் தமது மனைவி உபாசனாவுடன் திருமண விழாவில் பங்கேற்றார். நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் திருமண நிகழ்வில் பங்கேற்றார்