மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மகள் குறித்து தவறான செய்திகளை பரப்பியதாக யூடியூபர் துருவ் ரத்தி மீது மகாராஷ்டிர போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சபாநாயகர் ஓம் பிர்லாவின் மகள் அஞ்சலி, தேர்வு எழுதாமலேயே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றதாக, துருவ் ரத்தி தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக அஞ்சலியின் உறவினர் அளித்த புகாரின் பேரில், துருவ் ரத்தி மீது மகாராஷ்டிர போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.