ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் 2 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 5 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆளும் தெலுங்கு தேசம் கட்சியின் எம்எல்ஏ ரகுராம கிருஷ்ணம் ராஜு அளித்த புகாரின் பேரில் ஜெகன்மோகன், முன்னாள் டிஜிபி பிஎஸ்ஆர் ஆஞ்சநேயலு, முன்னாள் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுனில் குமார், குண்டூர் அரசு மருத்துவமனை முன்னாள் கண்காணிப்பாளர் பிரபாவதி உள்ளிட்டோர் மீது குண்டூர்
மாவட்டம் நகரம்பேலம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.