தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த கற்பதுக்கைகள் கண்டுபிடிக்கப்பட்டது.
திருமலாபுரம் கிராமத்தில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் தொல்லியல் ஆய்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 3 குழிகள் தோண்டப்பட்டு நடைபெற்ற அகழாய்வில் கற்பதுக்கைகள், பானை ஓடுகள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன. இந்த பொருட்கள் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.