தமிழ்நாடு முழவதும் காலியாக உள்ள 90 அரசு காலி பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு இன்று நடைபெற்று வருகிறது.
துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட 90 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த முதன்மை தேர்வு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. மதியம் 3 மணி நேரம் நடக்க இருக்கும் இந்த தேர்வில் பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சியில் மொத்தமாக 9 ஆயிரத்து 960 தேர்வர்கள் பங்கேற்று எழுதி வருகின்றனர். இதில் தேர்வர்கள் தீவிர சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் தாமதமாக வந்த தேர்வர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் தேர்வில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.