நீலகிரி மாவட்டம், கெரடா பகுதியில் விவசாயம் செழிக்கவேண்டி படுகர் இன மக்கள் பாராம்பரிய இசையுடன்கூடிய நடனமாடி வழிபாடு நடத்தினர்.
கெரடா பகுதியில் உள்ள பணகுடி வனகோவிலில் ஏராளமான படுகர் இன மக்கள் ஒன்றிணைந்து இந்த திருவிழாவை நடத்தினர்.
இக்கோயிலில் விரதம் இருந்த கிராம மக்கள் போதிய மழை வேண்டியும் ,கால்நடைகளுக்கு நோய்பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் இறைவனை வேண்டி தெவ்வ ஹப்பா எனும் பாரம்பரிய நடனத்தை ஆடினர்.
ஆண்கள் மட்டும் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியை அடுத்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.