விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் அன்னியூர் சிவா 67,169 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்றது. இதில் ஆரம்பம் முதலே திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை வகித்தார்.
இறுதியில். 1,23,195 ஓட்டுக்கள் பெற்று அவர் வெற்றி பெற்றார். பா.ம.க., வேட்பாளர் 56,026 ஓட்டுக்கள் பெற்று 2வது இடம் பிடித்தார்.
3வது இடத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி 10,479 ஓட்டுக்கள் மட்டும் பெற்று, டிபாசிட்டை இழந்தது.
* அன்னியூர் சிவா (தி.மு.க.,) – 1,23,195 ஓட்டுக்கள்
* சி.அன்புமணி (பா.ம.க.,) -56,026 ஓட்டுக்கள்,
* அபிநயா (நாம் தமிழர் வேட்பாளர்) -10,479 ஓட்டுக்கள்