திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் தேனீர் கடைக்கு சொந்தமான குடோனில் திடீரென ஏற்ட்ட தீ விபத்தில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், குடோனில் சேமித்து வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்கள் மற்றும் மின்சாதன பொருட்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து சேதமானது. தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.