விவசாயிகளை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக பெண் ஐஏஎஸ் அதிகாரியின் பெற்றோர் மீது புகார் எழுந்த நிலையில், அவர்களது வீட்டில் புனே போலீஸார் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேயை சேர்ந்த பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இந்த நிலையில், புனே மாவட்டம் தாட்வாலி கிராமத்தில் விவசாயிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக பூஜா கேத்கரின் பெற்றோர் மீது புகார் எழுந்தது.
அந்த வகையில், பூஜா கேத்கர் தாய் மனோரமா, தந்தை திலீப் கேத்கர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நநிலையில், மனோரமாவின் துப்பாக்கி உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என கேள்வி எழுப்பி, அதற்கு 10 நாளில் பதிலளிக்குமாறு அவருக்கு போலீஸார் நோட்டீஸ் அளிக்க சென்றனர்.
இருப்பினும், நோட்டீஸை ஏற்க மறுத்ததால், அவரது வீட்டு வாசலில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.