சென்னை அண்ணாநகரில் நடந்துவரும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டு ஆடிப் பாடி மகிழ்ந்தனர்.
சென்னையின் முக்கிய பகுதிகளான தி.நகர், அண்ணா நகர், பெசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகள் கடும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படுகிறது.
இந்த பரபரப்பான சூழலை மறந்து, மக்கள் சற்று நேரம் மகிழ்ச்சியுடன் கழிக்கவே, ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி கடந்த ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதன்படி அண்ணாநகர் 2வது நிழற்சாலையில் ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று சைக்கிளிங், ஸ்கேட்டிங், பாட்டுப் போட்டி, நடனப் போட்டி ஆகியவற்றில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.
வேலைப்பளுவுக்கு இடையே இதுபோன்ற நிகழ்ச்சி மகிழ்ச்சியும், அமைதியும் அளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.