தலைமை பயிற்சியாளர் பதவி! - கம்பீருக்கு இவ்வளவு சலுகைகளா?
Aug 24, 2025, 11:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தலைமை பயிற்சியாளர் பதவி! – கம்பீருக்கு இவ்வளவு சலுகைகளா?

Web Desk by Web Desk
Jul 15, 2024, 07:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள கவுதம் கம்பீருக்கு ஆண்டுக்கு சுமார் 12 கோடி ரூபாய் ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பல்வேறு சலுகைகள் அவருக்கு வழங்கப்படவுள்ளன.

அண்மையில் டி20 உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது இந்திய கிரிக்கெட் அணி. அந்த தொடரோடு அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஓய்வுபெற்றார். அதனைத் தொடர்ந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஊதியம் தொடர்பாக அவருக்கு பிசிசிஐ-க்கும் உடன்பாடு ஏற்படுவதில் தாமதம் ஏற்பட்டதால்தான் நியமனம் தள்ளிப்போனதாக கூறப்படுகிறது. முன்னாள் பயிற்சியாளர் டிராவிட்டை விட கம்பீருக்கு அதிக ஊதியம் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிகிறது. டிராவிட் ஆண்டுக்கு சுமார் 10 கோடி ரூபாய் ஊதியம் பெற்றதாகவும், கம்பீருக்கு ஆண்டுக்கு சுமார் 12 கோடி ரூபாய் ஊதியம் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது தவிர வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது நாள் ஒன்றுக்கு 21 ஆயிரம் ரூபாய், BUSINESS CLASS விமானப் பயணங்கள், உலகத்தரம் வாய்ந்த தங்குமிடம் போன்ற சலுகைகளும் அவருக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிகிறது. இளம் வயதில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு வந்திருக்கும் கவுதம் கம்பீரின் சர்வதேச கிரிக்கெட் பயணம் 2003-ஆம் ஆண்டு தொடங்கியது. வங்கதேசத்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அறிமுகமானார் கம்பீர். அதைத்தொடர்ந்து 2004-ஆம் ஆண்டு டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார்.

2007-ஆம் நடந்த முதல் டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 75 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார். அதே போல் 2011-ல் நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 97 ரன்கள் அடித்து வெற்றிக்கு வித்திட்டார். இந்தியாவுக்காக 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4 ஆயிரத்து 154 ரன்களையும், 147 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 5 ஆயிரத்து 238 ரன்களையும் அடித்துள்ளார் கம்பீர்.

ஐ.பி.எல்.லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இரண்டு முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். 2018-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு கே.கே.ஆர். அணிக்காக பணியாற்றி வந்தார். அவரது வழிகாட்டுதலில் நடப்பாண்டில் ஐ.பி.எல். கோப்பையை வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. மாடர்ன் கிரிக்கெட்டை உன்னிப்பாக கவனித்து வருபவர் என்ற அடிப்படையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

அடுத்து நடைபெற இருக்கும் 50 ஓவர் சாம்பியன்ஸ் டிராபி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், டி20 உலகக்கோப்பை, 50 ஓவர் உலகக்கோப்பை போன்ற முக்கிய ஐ.சி.சி. தொடர்களில் கம்பீரின் வழிகாட்டுதல்படியே இந்திய அணி செயல்படப் போகிறது. எனவே அவர் முன்பு பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன.

நட்சத்திர வீரர்களை கையாள்வது, மூத்தவர்களின் அனுபவத்தையும் இளம் வீரர்களின் துடிப்பையும் ஒன்று சேர்ப்பது, நவீன கிரிக்கெட்டுக்கு ஏற்ப அணிக்குள் புதுமையை புகுத்துவது, பணிச்சுமையை குறைத்து சர்வதேச போட்டிகளுக்கு வீரர்களை தயார்படுத்துவது, ஊடகங்களை கையள்வது என பல்வேறு சவால்களை கம்பீர் சமாளிக்க வேண்டும்.

கடந்த காலங்களில் களத்தில் சக வீரர்கள் மற்றும் நடுவர்களோடு மோதல் போக்கை கடைப்பிடித்தது, செய்தியாளர் சந்திப்பில் கோபப்படுவது போன்ற சர்ச்சைகளில் கம்பீர் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: The position of head coach! - So many privileges for Gambhir?
ShareTweetSendShare
Previous Post

பொருளாதார வளர்ச்சி அமெரிக்காவை முந்தும் இந்தியா!

Next Post

38 ஆண்டுகளில் 170 கோடியை எட்டும் இந்திய மக்கள் தொகை!

Related News

மின்வாரிய அலட்சியத்தால் பறிபோன உயிர் : தாயை இழந்து தவிக்கும் குழந்தைகள்!

திருத்தணி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிறுத்தம் – நோயாளிகள் அவதி!

ராணுவத்திற்கு வலிமை சேர்க்கவுள்ள ‘சுதர்ஷன் சக்ரா’: சிறப்பம்சங்கள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

சங்கரன்கோவில் அருகே விசாரணை என்ற பெயரில் இளைஞரின் காலை உடைத்த போலீசார் – தொடரும் அத்துமீறல்!

விண்வெளியில் தனி ஆய்வு மையம் : மாதிரி வடிவமைப்பை வெளியிட்ட இஸ்ரோ – சிறப்பு தொகுப்பு!

பட்டப்படிப்பில் பண்டைய வேத கணிதங்கள், பஞ்சாங்கம் உள்ளிட்ட படிப்புகளை அறிமுகப்படுத்தலாம் – யுஜிசி பரிந்துரை!

Load More

அண்மைச் செய்திகள்

சபாநாயகர் பதவியின் கண்ணியத்தையும் மரியாதையையும் அதிகரிக்க சபாநாயகர்கள் பாடுபட வேண்டும் – அமித் ஷா

தென்பெண்ணையாற்றில் கழிவுநீர் கலக்கும் அவல நிலை – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி – ஆஸ்திரேலியா வெற்றி!

அமெரிக்காவை அழிவின் விளிம்பிற்கு அழைத்துச் செல்லும் இந்தியா மீதான வரிவிதிப்பு : எச்சரிக்கை விடுக்கும் நிபுணர்கள் – சிறப்பு தொகுப்பு !

சட்டவிரோத சூதாட்டம், காங். எம்எல்ஏ கைது : அமலாக்கத்துறை சோதனையில் அள்ள அள்ள பணம் – சிறப்பு தொகுப்பு!

இபிஎஸ் தான் என்டிஏ கூட்டணி முதல்வர் வேட்பாளர் – நயினார் நாகேந்திரன் உறுதி!

புற்று நோயாளிகளுக்கு GOOD NEWS : நம்பிக்கை தரும் தடுப்பூசி – சிறப்பு தொகுப்பு!

பழனி அருகே தேனீர் அருந்திக்கொண்டிருந்தவர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை!

திருமணம் செய்து கொள்ள காதலன் மறுப்பு : 7-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை!

ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் முதல் சோதனை வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies