38 ஆண்டுகளில் 170 கோடியை எட்டும் இந்திய மக்கள் தொகை!
Sep 5, 2026, 11:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

38 ஆண்டுகளில் 170 கோடியை எட்டும் இந்திய மக்கள் தொகை!

Murugesan M by Murugesan M
Jul 15, 2024, 09:39 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இன்னும் 38 ஆண்டுகளில், இந்தியாவின் மக்கள் தொகை 170 கோடியாக இருக்கும் என்று ஐ.நா. ஆய்வறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஐ.நா.வின் உலக மக்கள் தொகை மதிப்பீடுகள் என்ற ஆய்வறிக்கை அண்மையில் நியூயார்க்கில் வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையில், 2024ம் ஆண்டில் 820 மில்லியனாக இருக்கும் உலக மக்கள் தொகை 2080 ஆம் ஆண்டு உச்சத்தை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 50-60 ஆண்டுகளில் உலக மக்கள் தொகை அதிகபட்சமாக 1030 கோடியைத் தொடும் என்றும், இந்த நூற்றாண்டின் இறுதியில் 1020 கோடியாக குறையும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சீனாவை பின்னுக்குத் தள்ளிவிட்டு, உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாறியது.

தற்போது இந்திய மக்கள் தொகை 145 கோடியாகும். நடப்பு நூற்றாண்டு முழுவதிலுமே இந்தியா உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கும் என்று கணித்த ஐ.நா அறிக்கை, 2054ம் ஆண்டு இந்திய மக்கள் தொகை 169 கோடியாக அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

2062ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை இந்தியாவின் மக்கள்தொகை படி படியாக குறையத் தொடங்கும். 2062ம் ஆண்டில் இந்திய மக்கள் தொகை 170 கோடி என்ற உச்சத்தைத் தொடும் என்றும், அதன்பின் படிப்படியாக குறையும் எனவும் அந்த அறிக்கை மதிப்பீடு செய்துள்ளது.

இப்போது, அதிக மக்கள் தொகை கொண்ட முதல் நாடான இந்தியாவுக்கு அடுத்தபடியாக 1.419 பில்லியன் மக்கள் தொகையுடன் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. 345 மில்லியன் மக்கள் தொகையுடன் அமெரிக்கா மூன்றாவது இடத்தில் உள்ளது.

2054 ஆம் ஆண்டு, இந்தியாவும் சீனாவும் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் வரிசையில் முதல் இரண்டு இடத்தைத் தக்க வைத்து கொள்ளும் நிலையில், மூன்றாவது இடத்தை 389 மில்லியன் மக்கள்தொகையுடன் பாகிஸ்தான் பெற்றுவிடும் என்கிறது இந்த ஐ.நா.அறிக்கை. 21 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை இந்த தரவரிசை தொடரும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

தற்போது 8.16 பில்லியனாக இருக்கும் உலக மக்கள் தொகை 2080 ஆம் ஆண்டுகளில் உச்சத்தை எட்டும் என்று தெரிவித்துள்ள ஐநா அறிக்கை, அடுத்த அறுபது ஆண்டுகளில் உலக மக்கள் தொகை அதிகபட்சமாக 1030 கோடியை எட்டும் என்று கூறுகிறது.

அங்கோலா, மத்திய ஆப்பிரிக்க குடியரசு, காங்கோ ஜனநாயக குடியரசு, நைஜர் மற்றும் சோமாலியா ஆகிய 9 நாடுகளின் மொத்த மக்கள் தொகை அடுத்த 30 ஆண்டுகளில் இரட்டிப்பாகும் என்று ஐநா அறிக்கை தெரிவிக்கிறது.

சீனா, இத்தாலி, கொரியா குடியரசு மற்றும் ஸ்பெயின் உட்பட அனைத்து நாடுகளிலும் பெண்களின் கருவுறுதல் விகிதம் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு, 1990ம் ஆண்டை விட கணிசமான அளவில் குறைந்து வருகிறது . எனவே, இந்த நூற்றாண்டின் இறுதியில் உலக மக்கள் தொகை 1020 கோடியாக குறையும் என்றும் ஐநா அறிக்கை தெரிவிக்கிறது.

இதன் படி, 2080 ஆம் ஆண்டில், உலகில் 18 வயதுக்கு உட்பட்டவர்களை விடவும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிகமாக இருப்பார்கள் என்று தெரிய வருகிறது.

Tags: India's population will reach 170 crores in 38 years!
Share
Tweet
SendShare
Previous Post

தலைமை பயிற்சியாளர் பதவி! – கம்பீருக்கு இவ்வளவு சலுகைகளா?

Next Post

அமெரிக்காவை மாற்றும் சக்தி கொலையாளிகளின் கைகளில் இருக்கக்கூடாது!- ஜோ பைடன்

Related News

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies