வரும் 19-ஆம் தேதி ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு மீண்டும் நடத்தப்படவுள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
க்யூட் யூஜி தேர்வின்போது மாணவர்கள் தேர்ந்தெடுத்த மொழிக்குப் பதிலாக வேறு மொழியில் வினாத்தாள் வழங்கப்பட்டது குளறுபடியை ஏற்படுத்தியது. இதனால் நேர இழப்பை சந்தித்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த தேசிய தேர்வுகள் முகமை முடிவு செய்தது.
முன்னதாக இந்தத் தேர்வுக்கான உத்தேச விடைக் குறிப்பு வெளியிடப்பட்ட நிலையில், அதில் தவறுகள் இருந்தால் சரியான விளக்கத்துடன் புகாரளிக்கும் மாணவர்களுக்கும் மறுதேர்வு நடத்தப்படும் என்று தேர்வுகள் முகமை அறிவித்திருந்தது.
அந்த வகையில், மறுதேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு வரும் 19-ஆம் தேதி தேர்வு நடத்தப்படும் என்றும், இதற்கான அனுமதிச் சீட்டு விரைவில் வெளியிடப்படும் என்றும் தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.