நேபாள பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள கே.பி. சர்மா ஒலிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான நட்புறவின் ஆழமான பிணைப்பை மேலும் வலுப்படுத்தவும், பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் நெருக்கமாகப் பணியாற்ற ஆர்வமாக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில்,
“நேபாள பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு கே.பி. சர்மா ஒலிக்கு கே.பி. சர்மா ஒலிக்கு நல்வாழ்த்துகள். நமது இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான நட்புறவை மேலும் வலுப்படுத்தவும், நமது மக்களின் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்காக பரஸ்பரம் பயனளிக்கும் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தவும் நெருக்கமாகப் பணியாற்ற ஆவலாக இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.