விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தி செய்துவந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருத்தங்கல் பெரியாறு காலனியை சேர்ந்த பால்பாண்டி அட்டை தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். அவரது கம்பெனியில் சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தி செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட சோதனையில், பேன்சி ரக பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக 3 பேரை கைது செய்த போலீசார் 60 கிலோ மருந்துப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.