ஆந்திர மாநிலம், திருப்பதியில், அரசு உண்டு உறைவிட பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குருகுல பாடசாலை என்ற பெயரில் ஆந்திர அரசு உண்டு உறைவிட பள்ளிகளை நடத்தி வருகிறது.
இந்நிலையில், நாயுடுபேட்டை பகுதியில் இயங்கி வரும் அம்பேத்கர் குருகுல பாடசாலையில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
அப்போது 50 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர், உரிய விசாரணை நடத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.