நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் தொடர்பான வழக்கில் டெல்லி செசன்ஸ் நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப் பத்திரிகையை போலீஸார் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் கைதான நபர்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதியளித்ததையடுத்து, கூடுதல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதைப் பரிசீலித்த நீதிபதி ஹர்தீப் கவுர், அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும், இந்த வழக்கில் கைதான நபர்களின் நீதிமன்றக் காவலும் அன்றைய தினம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.