காவிரி விவகாரத்தில் திமுகவை மன்னிக்க தமிழக விவசாயிகள் தயாராக இல்லை என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, சென்னை பல்லவன் இல்லத்தில் அவர் அளித்த பேட்டியில்,
தமிழ்நாடு அரசு பெருந்தலைவர் காமராஜருக்கு உண்மையில் பெருமை சேர்க்க வேண்டும் என்று வேண்டினால், தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வேண்டிக்கொள்கிறேன்.
விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் வகையில் கர்நாடக காங்கிரஸ் அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்க மறுக்கிறது. கூட்டணிக்காக திமுக இதனை வேடிக்கை பார்ப்பது ஏற்புடையது அல்ல.
உடனடியாக அனைத்து கட்சி கூட்டம் கூட்டியோ அல்லது கர்நாடக முதல்வரை நேரில் சந்தித்தோ தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.