விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற செக் குடியரசு வீராங்கனை பார்போரா கிரெஜ்சிகோவாவுடன் இணைந்து விம்பிள்டன் சாம்பியன் அல்கராஸ் உற்சாகமாக நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலானது.
லண்டனில் நடந்த விம்பிள்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், நடப்புச் சாம்பியனான அல்கராஸ், ஏழு முறை விம்பிள்டன் சாம்பியனும், அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார்.
இந்த நிலையில், செக் குடியரசு வீராங்கனை பார்போரா கிரெஜ்சிகோவாவுடன் இணைந்து அல்கராஸ் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலானது.