தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
கோவிலிலிருந்து வெளியே வந்த அவரை, கோவில் பணியாளர்களும், ரசிகர்களும் சூழ்ந்து கொண்டு கை குலுக்கியும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சிவகார்த்திகேயன், “தனது புதிய படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும்” என்றார்.