தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு ஜூலை 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த புதிய மின் கட்டண உயர்வின்படி, 400 யூனிட் வரை பயன்படுத்தும் வீடுகளுக்கு யூனிட் ஒன்றுக்கு 4 ரூபாய் 60 காசுகள் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 4 ரூபாய் 80 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல், 401 யூனிட் முதல் 500 யூனிட் வரை பயன்படுத்தும் வீடுகளுக்கான மின் கட்டணம், 6 ரூபாய் 15 காசுகளில் இருந்து 6 ரூபாய் 45 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
501 முதல் 600 யூனிட் வரையிலான வீடுகளுக்கான மின் கட்டணம், ஒரு யூனிட்டிற்கு 8 ரூபாய் 15 காசுகளில் இருந்து 8 ரூபாய் 55 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
601 முதல் 800 யூனிட் வரையிலான வீடுகளுக்கான மின் கட்டணம், யூனிட் ஒன்றுக்கு 9 ரூபாய் 20 காசுகளில் இருந்து 9 ரூபாய் 65 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
801 முதல் 1,000 யூனிட் வரையிலான வீடுகளுக்கான மின் கட்டணம், யூனிட் ஒன்றுக்கு 10 ரூபாய் 20 காசுகளில் இருந்து 10 ரூபாய் 70 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 8 ரூபாய் 15 காசுகளில் இருந்து 8 ரூபாய் 55 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
தொழில் மற்றும் ஐடி நிறுவனங்களுக்கான மின் கட்டணம் ஒரு யூனிட்டிற்கு 7 ரூபாய் 65 காசுகளில் இருந்து 8 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
50 யூனிட்டுக்கு மேல் வணிக பயன்பாட்டுக்கான மின் கட்டணம் ஒரு யூனிட்டிற்கு 9 ரூபாய் 70 காசுகளில் இருந்து 10 ரூபாய் 15 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.