மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியில், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் வீட்டருகே நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செல்லூரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர், நாம் தமிழர் கட்சியில் மதுரை மாநகர் வடக்கு தொகுதி துணைச் துணைச் செயலாளராக இருந்தார்.
இன்று காலை அவர் வழக்கம்போல் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது, 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை பின் தொடர்ந்ததாக கூறப்படுகிறது.
வல்லபாய் சாலையில் அமைந்துள்ள அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் வீட்டருகே, அக்கும்பல் பாலசுப்ரமணியனை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது.
பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தல்லாகுளம் காவல்துறையினர், பாலசுப்பிரமணியனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அமைச்சரின் வீட்டருகே நிகழ்ந்துள்ள இந்த கொலை, பொதுமக்களை அச்சத்தில் ஆழத்தியுள்து.