நீலகிரியில் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், மாயாற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் தரைப்பாலம் மூழ்கியது.
நீலகிரியில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மாயார் ஆற்றின் நடுவே உள்ள தரைப்பாலம் காட்டாற்று வெள்ளத்தில் மூழ்கியது.
இதைனையடுத்து உதகையில் இருந்து தெப்பக்காடு வழியாக கூடலூர், கர்நாடகா இடையேயான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆற்றின் அருகே பொதுமக்கள் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.