நீலகிரி மாவட்டத்தில் இன்று கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உதகை படகு இல்லத்தில் படகு சவாரி நிறுத்தப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூர், பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
மழையின் தாக்கம் தீவிரமாக உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உதகை படகு இல்லத்தில் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால், அங்குள்ள படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன. படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மழை தொடர்வதால் சுற்றுலா பயணிகள் அறைகளில் முடங்கியுள்ளனர்.