காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை நீடித்து வரும் நிலையில், பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 19 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
காவிரி நீர் பிடிப்பு பகுதியில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணசாகர் அணையில் இருந்து தமிழகத்திற்கு கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து 19 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.