இந்தியாவின் கார் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வளர்ச்சியடைந்துள்ளதாக ஆட்டோ மொபைல் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நடப்பு ஆண்டின் காலாண்டு கணக்கீட்டின் படி கார்களின் ஏற்றுமதி 1.80 லட்சம் ஆக அதிகரித்துள்ளது எனவும், இந்த தேவை முந்தைய ஆண்டை விட 18.60 விழுக்காடு உயர்வு எனவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், வாடிக்கையாளர்களின் தேவை, முதலீட்டாளர்களின் ஈர்ப்பை பொறுத்து அதிகரித்துள்ளதாக ஆட்டோ மொபைல் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.