மும்பை-லோனாவாலா விரைவுச்சாலையில், பேருந்தும், ட்ராக்டரும் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் பலியாகினர்.
கேசர் கிராமத்திலிருந்து மும்பை விரைவுச்சாலை வழியாக பந்தர்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து, ட்ராக்டருடன் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், நான்கு பேர் பலியான நிலையில், பத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் அருகிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து காரணமாக மும்பை-லோனாவாலா பாதையில் வாகன போக்குவரத்து சுமார் 3 மணி நேரம் பாதிக்கப்பட்டது