பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்திய கூட்டணி வீரர்கள் சாத்விக் மற்றும் சிராக் மோதவுள்ள வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
33வது பாரீசில் வரும் 26-ம் தேதி ஒலிம்பிக் போட்டி தொடங்குகிறது. ஆண்கள் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவினருக்கான அட்டவணை வெளியிடப்பட்டது.
இதில் சி-பிரிவு ஆட்டத்தில் சாத்விக் சாய்ராஜ் -சிராக் ஷெட்டி கூட்டணி இடம்பிடித்துள்ளது. இவர்களுடன் உலகதரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள பாஜர் அல்பியான்-ரியான் அட்ரியான்டோ இணை பலப்பரீட்சை நடத்தவுள்ளது குறிப்பிடதக்கது