திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியில் லாரி ஏறி இறங்கியதில் 8 வயது சிறுமி உடல் நசுங்கி பலியானார்.
இப்பகுதியைச் சேர்ந்த ஜோஷ். என்பவர் தனது மகள் ஜபாலை பள்ளியிலிருந்து அழைத்து வந்துக்கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வந்த கார் இவர்கள் மீது மோதியதில் இருவரும் கீழே விழுந்தனர். இதில் ஜோஷ் சிறுகாயங்களுடன் உயிர்தப்பிய நிலையில் சிறுமியின் மீது அவ்வழியாக வந்த லாரி ஏறி இறங்கியது. இந்த விபத்தில் சிறுமி ஜபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.