கடலூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
காராமணி குப்பத்தை சேர்ந்தவர் கமலீஸ்வரி. இவரது கணவர் இறந்து விட்ட நிலையில், இரு மகன்களும் வெளி மாநிலங்களில் பணியாற்றி வருகின்றனர். இளையமகன் சுதன் குமாரின் மகன் மற்றும் பாட்டி கமலீஸ்வரி வீட்டில் தங்கியிருந்தனர்.
இந்நிலையில், சுதன்குமார் 10 நாட்களுக்கு முன்பு சுதன் காராமணி குப்பத்திற்கு வந்துள்ளார். சில நாட்களாக வீடு பூட்டி கிடந்த நிலையில், உள்ளிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.
இதுகுறித்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், கதவை திறந்து பார்த்த போது மூன்று பேரும் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்ட நிலையில் கிடந்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.