மின்கட்டண உயர்வு அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக வரலாற்றில் இவ்வளவு குறுகிய காலத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்று கூறியுள்ளார்.
திமுக அரசின் இந்த நடவடிக்கை மக்கள் விரோதச் செயல் என்றும், உடனடியாக இந்த மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.