போக்குவரத்து தொழிலாளர்களை மிரட்டிப் பணம் கேட்கும் திமுக தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் கிளை செயலாளர்!
Aug 29, 2026, 08:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

போக்குவரத்து தொழிலாளர்களை மிரட்டிப் பணம் கேட்கும் திமுக தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் கிளை செயலாளர்!

Murugesan M by Murugesan M
Oct 30, 2025, 07:11 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பொம்மிடி போக்குவரத்து பணிமனையில், திமுக தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் கிளை செயலாளர், தொழிலாளர்களை மிரட்டிப் பணம் கேட்கும் ஆடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது..

சேலம் கோட்டம் தருமபுரி மண்டலம் பொம்மிடி போக்குவரத்து பணிமனையில், திமுகவை சேர்ந்த தொழிலாளர் முன்னேற்றச் சங்க செயலாளர் மாது என்பவர், கட்டுப்பாட்டு பிரிவில் பணியாற்றி வருவதாகக் கூறி, ஒப்பந்த தொழிலாளர்கள் 40 பேரிடம் தலா 25 ஆயிரம் ரூபாய் பெற்று கொண்டு பணி வழங்கியதாகத் தெரிகிறது.

ஒப்பந்த தொழிலாளர்களிடம் தினந்தோறும் 200 ரூபாய் வாங்கிக் கொண்டு வேலை வழங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனிடையே, உடல்நலம் பாதிக்கப்பட்ட நிரந்தர பணியாளரான சௌந்தரராஜன் என்பவரிடம், விடுப்பு வழங்க 3 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றும், மேலதிகாரிகளை அனுசரித்தால்தான் தன்னுடன் பயணிக்க முடியும் எனவும் பேசியுள்ளார்.

கேட்ட தொகையைக் கொடுத்தால் தான் விடுப்பு கிடைக்கும் எனவும் மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். இந்த ஆடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனிடையே, தினசரி செல்லும் வழித்தடத்தை மாற்றி, வேறு தடத்தில் பணிமனை மேலாளர் பேருந்தை இயக்கச் சொல்வதால் பொதுமக்கள் புகார் அளிப்பதாகப் பாதிக்கப்பட்ட ஓட்டுநரின் மனைவி வேதனை தெரிவித்துள்ளார்.

புகாருக்குக் காரணமானவர்களை விட்டு விட்டு, ஓட்டுநர்களைப் பணி செய்ய விடாமல் மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், சர்வதிகாரி போல் செயல்படும் திமுக தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் கிளை செயலாளர் மற்றும் பணிமனை மேலாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Bommidi Transport Workshop: DMK Workers' Progress Association branch secretary blackmails workers and demands money
Share
Tweet
SendShare
Previous Post

டிரம்ப்புடன் தொடர்ந்து பணியாற்ற தயாராக உள்ளேன் – சீன அதிபர்

Next Post

17 குழந்தைகளை கடத்தி பணய கைதிகளாக வைத்திருந்த நபர் என்கவுன்டரில் உயிரிழப்பு!

Related News

சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு குறித்த தவெக எம்எல்ஏ-வின் பேச்சு : அதிமுக கண்டனம்!

இன்றைய தங்கம் விலை!

நேபாள வெள்ளத்தில் மீட்கப்பட்ட 21 தமிழர்கள் – சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

நேபாள வெள்ளத்தில் சிக்கிய 320 இந்தியர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை; வெளியுறவுத்துறை தகவல்

நேபாளத்தில் இருந்து நாடு திரும்பிய தமிழர்கள்; அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்பு

வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூல் – அரசிடம் செலுத்தாத போக்குவரத்து காவல் நிலையங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாள வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வங்கி லாக்கரில் இருந்து 93 லட்சம் கொள்ளை – 29 பேர் கைது!

4 நாள் அரசு முறைப்பயணம் – உஸ்பெகிஸ்தான் புறப்பட்டார் பிரதமர் மோடி!

டி.என்.பி.எல்.கிரிக்கெட் தொடர் – சாம்பியன் பட்டம் வென்றது கோவை!

வெனிசுலா நாட்டுடன் எண்ணெய் ஒப்பந்தம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க இஸ்கானில் நடைபெற்ற வீடற்ற மக்களுக்கான உணவு வழங்கும்  நிகழ்ச்சி – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்பு!

4 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்கு புறப்படுகிறார் பிரதமர் மோடி – ஷாங்காய் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்!

பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு நிவாரணப் பொருட்கள் : 3-வது விமானத்தை அனுப்பியது இந்தியா!

நேபாள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 84 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு – வெளியுறவுத்துறை அமைச்சகம்

ரஷ்ய-இந்திய உறவு மேம்பட பிரதமர் மோடியே காரணம் : நெகிழ்ந்த ரஷ்ய அதிபர் புதின் – சிறப்பு தொகுப்பு!

“இந்தியா தர்ம சத்திரம் அல்ல” : மத்திய அமைச்சர் அமித் ஷா ஆவேசம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies