தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் கன்னியாகுமரியில் தாமிரபரணி, கோதையாறுகளின் ஆற்றாங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
இதனால் வினாடிக்கு 500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஆற்றாங்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
			 
                    















