மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக நெல்லையிலுள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
தொடர்மழை காரணமாக இம்மாவட்டத்தின் பிரதான அணைகளான காரையார் மற்றும் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
அதன்படி 143 கன அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் காரையார் அணையின் நீர்மட்டம் 110. 80 அடியாக அதிகரித்து உள்ளது, அதே போல் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 9 அடி உயர்ந்து 129.20 அடியாகவும், மணிமுத்தாறு 73.10 அடியாகவும் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.