கன்னியாகுமரியில் பெய்து வரும் கனமழை காரணமாக திற்பரப்பு அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென் மேற்கு பருவ மழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ள நிலையில் நீர்நிலைகள் நிறைந்து வருகிறது. குறிப்பாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகள் அதன் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது.
இதையடுத்து, பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால், திற்பரப்பு அருவியில் அளவுக்கு அதிகமான தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது, இதனால், அருவியில் குளிக்க சுற்றுலாப்பயணிகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.