நிகழாண்டு ஜூன் வரையிலான 6 மாத காலத்தில் உள்நாட்டு விமானங்களில் 79 கோடியே 34 லட்சம் பேர் பயணித்திருப்பதாக உள்நாட்டு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் 76 கோடி பேர் உள்நாட்டு விமானப் போக்குவரத்தைப் பயன்படுத்திய நிலையில், நடப்பாண்டில் இந்த வீதத்தில் 4.28 சதவீதமும், மாதாந்திர அடிப்படையில் 5.76 சதவீதமும் உயர்வு ஏற்பட்டிருப்பதாக உள்நாட்டு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.