ஈரோடு பேருந்து நிலையத்தில் விதிகளை மீறி அதிக ஒலி எழுப்பும் ஹாரன் பொருத்திய பேருந்துகளுக்கு வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் பொருத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதனையடுத்து ஈரோடு பேருந்து நிலையத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது 2 அரசுப் பேருந்து உள்ளிட்ட 8 பேருந்துகள் அதிக ஒலி எழுப்பும் ஹாரனை பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. அந்த பேருந்துகளுக்கு தலா 10 ஆயிரம் வீதம் 80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.