சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கணக்கில் வராத 90 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் ஒட்டுநர் உரிமம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு அதிக அளவில் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து அங்கு சோதனை செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், மோட்டார் வாகன ஆய்வாளர் சித்ரா அறையிலிருந்த கணக்கில் வராத 90 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.