தெலங்கானாவில் ஒன்றாம் வகுப்பு பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடன ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
மேட்சல் மாவட்டத்தில் உள்ள பொடுப்பல் நகரில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.
அங்கு நடன ஆசிரியராக பணியாற்றியவர் ஒன்றாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த பெற்றோர் புகார் அளித்ததின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆசிரியரை கைது செய்தனர்.