திருச்சி -அபுதாபி இடையே ஆகஸ்ட் 11 -ஆம் தேதியிலிருந்து 4 கூடுதல் விமான சேவை தொடங்கப்படவுள்ளது.
அபுதாபிக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், கூடுதல் விமானங்களை இயக்க வலியுறுத்தப்பட்டது.
மேலும் வார நாள்களில் மொத்தம் 7 விமான சேவைகள் இயக்கப்படவுள்ளதால், வளைகுடா நாடுகளுக்கு செல்லும் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.