திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புஷ்ப பல்லக்கு உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
சென்னையை சேர்ந்த பக்தர் திரிலோகசந்தர், ஒரு டன் எடை கொண்ட ரோஜா, மல்லிகை, சாமந்தி, கனகாம்பரம் மலர்களை வழங்கினார்.
இதனைதொடர்ந்து உள்நாட்டு மலர்கள், இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மலர்களை பயன்படுத்தி ஒரு வாரமாக புஷ்ப பல்லக்கை தயார் செய்யும் பணியில் தேவஸ்தான தோட்டத்துறையினர் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், புஷ்ப பல்லக்கு உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.