புது டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக ஆளுநர் ஆர். என் ரவி இன்று சந்தித்தார்.
இந்த சந்திப்பு குறித்து தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
“உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களுடன் தமிழ்நாட்டில் நிலவும் பாதுகாப்பு, அது தொடர்புடைய சூழ்நிலைகள், மாநில மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பில் அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து மிகவும் ஆக்கபூர்வ சந்திப்பை மேற்கொண்டேன்.
நமது மக்களை பாதிக்கும் பிரச்சனைகள் மீது அற்புதமான ஆழந்த பார்வையும் அவர்களின் நல்வாழ்வில் மிகுந்த அக்கறையும் அவருக்கு உள்ளது என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.