முஹர்ரம் திருநாளை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர். என் ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
அனைவருக்கும் அமைதியான மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட முஹர்ரம் உரித்தாகட்டும்! இந்நாள் அமைதி, நல்லிணக்கம், வளம் ஆகியவற்றை கொடுத்து கருணை, இரக்கம் மற்றும் சகோதரத்துவம் நிறைந்த உலகை வளர்த்தெடுக்க நம்மை ஊக்குவிக்கட்டும் என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.