மதுரையில் பள்ளி மாணவனை சக மாணவர்கள் சுற்றிவளைத்து தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வைகை ஆற்றுப்பகுதியில் உள்ள கல் பாலத்தில் பள்ளி மாணவனை, 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் இணைந்து சரமாரியாக தாக்குவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியானது.
இந்த வீடியோ வைரலாகி பெற்றோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசுப் பள்ளி மாணவிகள் பேருந்து நிலையத்தில் சரமாரியாக தாக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.