அசாமில் போலீசார் நடத்திய என்கவுண்டர் தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் போலீசார் பலர் கடுமையாக காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த அனைவரும் சில்சார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறை தரப்பில் அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்காத நிலையிலும், கவுகாத்தியில் உள்ள அஸ்ஸாம் காவல்துறை தலைமையகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் என்கவுண்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார்.