அயன் பட பாணியில் விமான பயணத்தின்போது குடிநீர் மற்றும் உணவை வாங்க மறுத்த ஏர் இந்தியா பயணியிடம் சந்தேகத்தின் அடிப்படையில் நடத்திய சோதனையில் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். ஜெட்டாவிலிருந்து டில்லிக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் ஐந்தரை மணி நேரமாக பயணி ஒருவர் நீர், உணவு ஆகியவற்றை மறுத்து வந்துள்ளார்.
இதுகுறித்து சந்தேகத்தின் பேரில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் டெல்லி வந்திறங்கிய பயணியிடம் நடத்தப்பட்ட சோதனையில், 69 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை வயிற்றில் மறைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.