சென்னையில் வரும் 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை 55 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தாம்பரம் ரயில்வே பணிமனையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், வரும் 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை 55 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை – தாம்பரம் இடையிலான வழித்தடத்தில், காலை 9.40 மணி முதல் நண்பகல் 12.50 மணி வரை 17 ரயில்களும், இரவு 11.05 முதல் 11.59 வரை 3 ரயில்களும் ரத்து செய்யப்படவுள்ளன.
தாம்பரம் – சென்னை கடற்கரை இடையிலான வழித்தடத்தில் காலை10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை 9 ரயில்களும், இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும் ரயிலும் ரத்து செய்யப்படவுள்ளது.
இதேபோல், செங்கல்பட்டு – சென்னை கடற்கரை வழித்தடத்தில், காலை 11.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை இயக்கப்படும் 3 ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.