தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று முதல் அருவிகளில் வெள்ளப்பெருக்கும் குறைந்ததால் குளிக்க விதிக்கப்பட்ட தடை படிப்படியாக நீக்கப்பட்டது. குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிகளில் ஆனந்த குளியல் போட்டு வருகின்றனர்.