ஈரோடு அருகே சென்றுகொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து தீபற்றி எரிந்த நிலையில் ஓட்டுநரின் துரித நடவடிக்கையால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சென்னை கோயம்பேட்டில் இருந்து கோவை நோக்கி 40 பயணிகளுடன் தனியார் பேருந்து சென்றுகொண்டிருந்தது. ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே சென்றபோது பேருந்தின் முன்பகுதி திடீரென தீப்பற்றி எரிந்தது.
இதைக் கண்ட ஓட்டுநர், பயணிகளை உடனடியாக வெளியேற்றினார். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.