டெல்லி விமான நிலையத்தில் மாரடைப்பு ஏற்பட்ட முதியவருக்கு முதலுதவி செய்து காப்பற்றிய மருத்துவருக்கு பாராட்டு குவிகிறது.
டெல்லி விமான நிலையத்தில் முதியவர் ஒருவர் புட்கோர்ட் பகுதியில் அமர்ந்து இருந்தார். அப்போது அவருக்கு திடீரெஅன மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
இதைக்கண்ட பெண் மருத்துவர் ஒருவர் முதியவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். பின்னர் 5 நிமிட முயற்சிக்கு பின் முதியவர் நலமுடன் கண் விழித்தார்.
மருத்துவரின் இந்த செயலுக்கு பலரும் பாரட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.